கும்கிகளுக்கு டிமிக்கி கொடுத்த சின்னதம்பி
பதிவு : பிப்ரவரி 09, 2019, 01:16 PM
சின்னதம்பி யானையை விரட்டச் சென்ற, கும்கிகள் திடீரென மிரண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணாடிபுத்தூரில், கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானை, அங்கு கும்கி யானைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்தது. உஷரான சின்னதம்பி யானை பயந்தவாறு மீண்டும் கரும்பு தோட்டத்திற்குள் ஓடி டிமிக்கி கொடுத்தது. அதேசமயம், கும்கி யானை மாரியப்பன், திடீரென மிரண்டு எதிர் திசையில் ஒட, கலீம் யானையும் பின்தொடர்ந்து ஒடியது. சமார்த்தியமாக செயல்பட்ட பாகன்கள், சில அடி தூரம் வரை ஓடவிட்டு, பின்பு அவற்றை கட்டுப்படுத்தினர். பின்னர், அங்கிருந்த பாசன வாய்க்காலில் கும்கியானைகளை இறங்கி குளிப்பாட்டி தண்ணீர் குடிக்க வைத்து சாந்தப்படுத்தினர். இதனை தொடர்ந்து, சின்னதம்பி மிகவும் நட்புடன் பழகிய, கலீம் யானையை வைத்து, அதை அடர்ந்த காட்டிற்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

பிற செய்திகள்

சீனாவில் ரஜினியின் 2.0 - செப்.6-ல் வெளியீடு : சமூக வலைதளத்தில் எமி ஜாக்சன் தகவல்

‌சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சீனாவில் திரையிடப்பட உள்ளது.

10 views

ஐ.எஸ்.எல். கால்பந்து 6வது சீசன் : போட்டி அட்டவணை வெளியீடு

ஐ.எஸ்.எஸ். கால்பந்து தொடரின் 6 வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

120 views

வடபழனியில் பேருந்து மோதி உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் : தலா ரூ.2 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

சென்னை வடபழனியில் உயிரிழந்த போக்குவரத்து துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

50 views

தனியார் நிலத்தில் 900 யூனிட் ஆற்று மணல் பதுக்கல் : மணல் குவியலை பறிமுதல் செய்த வட்டாட்சியர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பதுக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணல் குவியலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

106 views

பிச்சை எடுத்தவர் பையில் ரூ.1.83 லட்சம் : பணத்தை சக சாதுக்களுக்கு வழங்கிட உடன் பிச்சை எடுக்கும் சாதுக்கள் கோரிக்கை

ஆந்திராவில் உயிரிழந்த பிச்சை கார‌ர் பையில் இருந்து 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

290 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.