தமிழக பட்ஜெட் 2019 : 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு சிறப்பு தகுதித் திறன் பயிற்சி

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வேலைவாய்ப்பற்ற 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு சிறப்பு தகுதித் திறன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2019 : 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு சிறப்பு தகுதித் திறன் பயிற்சி
x
தொழிலாளர் நலன் சார்பில், மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்ட தலைமையிடங்களில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்  வேலைவாய்ப்பற்ற 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, சிறப்பு தகுதித் திறன் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை சார்பில், தமிழகத்தில் வானூர்தி மற்றும் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநிலத்தில் அமைப்பவர்களுக்கு உரிய ஊக்கம் அளிக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தடையற்ற தரமான மின்சாரத்தை பெறுவதற்கு தனி மின்பாதை அமைத்து, சீராக மின் விநியோகம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு மையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்