மீண்டும் திருப்பூரில் சின்னத்தம்பி யானை..!

திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பியுள்ள சின்னத்தம்பி யானையை பார்வையிட மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் திருப்பூரில் சின்னத்தம்பி யானை..!
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த வெள்ளியன்று முகாமிட்டிருந்த சின்னத்தம்பி யானை, அதனை தொடர்ந்து தீபாளபட்டி பகுதியிலிருந்து, கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதிக்கு சென்றது. அங்கு யானை முகாமிட்டிருந்த முட்காடு பகுதியை வனத்துறையினர் அழித்த நிலையில், யானை அங்கிருந்து கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த‌து. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், யானையை விரட்ட கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை வரை கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பகுதிகளில் சுற்றிவந்த சின்னத்தம்பி யானை, அமராவதி ஆற்றை கடந்து திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரத்திற்கு சென்றது. இதனிடையே மீண்டும் இரவில், அங்கிருந்து திருப்பூர் கண்ணாடிபுத்தூர் பகுதியில் உள்ள கரும்பு காட்டில் யானை முகாமிட்டுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் சின்னத்தம்பியை பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதுவதால், வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்