தமிழக பட்ஜெட் 2019
பதிவு : பிப்ரவரி 08, 2019, 03:52 PM
மாற்றம் : பிப்ரவரி 08, 2019, 07:33 PM
தமிழக அரசின் 2018-19 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்தார்.
வீட்டு வசதி திட்டம் அறிவிப்புகள்
   அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள்  கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க 6 ஆயிரத்து 573 கோடி ரூபாயும் 5 ஆயிரத்து 164 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய நிதிக்குழு பரிந்துரையின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்திற்கு 5 ஆயிரத்து178 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படவுள்ளன. இதன் மூலம் அரசால் ஆண்டிற்கு 74 கோடி ரூபாய்  சேமிக்கப்படும். 'திறன்மிகு நகரங்கள்' திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 326 திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கு ஆயிரத்து 650 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு ஆயிரத்து 546 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு-தனியார் பங்களிப்பு முறையில் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்கு 5 ஆயிரத்து 259 கோடி ரூபாய்க்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2019-2020 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு கூடுதல் நிதியாக 50 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20, 000 வீடுகள் கட்ட, 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்பட 4 இடங்களில் மீன்பிடி துறைமுகம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
   கால்நடை மற்றும் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம். மரபு திறன் மிக்க நாட்டு இன மற்றும் கலப்பின காளைகளைக் கொண்டு 100 கோடி திட்ட மதிப்பில் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறைக்காக ஆயிரத்து 252 கோடியும், பால்வளத்துறைக்காக 258 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 420 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்பட 4 இடங்களில் மீன்பிடி துறைமுகம் கட்டவும் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்டத்துறை, வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி செலவில் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 240 நேவிக் தகவல்கள் பெறும் கருவிகள் 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"காவல், தீயணைப்பு, நீதித்துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு"
   தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டு, 6 ஆயிரத்து 428 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 975 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2019 -20 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 8 ஆயிரத்து 84 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைகளை பொறுத்தவரையில் கடந்த பட்ஜெட்டில், 5 தீயணைப்பு நிலைய கட்ட‌டங்கள் கட்டுவதற்காக 3 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கபட்டிருந்த‌து.  இந்த பட்ஜெட்டில் 403 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சிறைச்சாலை பிரிவில், கடந்த பட்ஜெட்டில் 40 புள்ளி 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் 319 புள்ளி 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதி நிர்வாகத்தை பொறுத்தவரை, கடந்த பட்ஜெட்டில்101 புள்ளி 89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த‌து. அது இந்த ஆண்டு, ஆயிரத்து 265 கோடியே 64 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
   வறட்சி காலத்தில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க இதுவரை 157 கோடி ரூபாய் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை பெருக்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர்  அருகே ஒரத்தூர் நதியின் குறுக்கே உப வடிநிலங்களுக்கு இடையே நீர் பரிமாறும்  கால்வாயுடன் கூடிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி பரவனாற்றின் ஆற்றின் படுகையை மறுசீரமைத்து வெள்ள நீரை திருப்புவதற்காக புதிய கால்வாயை அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ளத் தடுப்பு நீரொழுங்கியும்,  பிச்சாவரம் கிராமத்தில் உப்பனாறு ஆற்றின் குறுக்கே கடைமடை நீரொழுங்கியும் அமைக்க 284 கோடியே 70 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு திருமங்கலம், கிள்ளிக்குடி, மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 வட்டங்களை அடங்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 

"வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு புதிய காப்பீடு"
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஒரு வீட்டுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம்  ரூபாய் வீதம் ஆயிரத்து 700 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 720 கோடி ரூபாய் தரும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள தமிழக அரசு,மாநில அரசு பங்காக 980 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கஜா பாதிப்பு உடனடி நிவாரண பணிகளுக்காக மாநில அரசின் நிதியிலிருந்து 2 ஆயிரத்து 361 கோடியே 41 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பயிர்க்கடனாக ரூ.10,000 கோடி வழங்க இலக்கு
வரும் நிதியாண்டில் பயிர்க்கடன் வழங்க பத்து ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன்மீதான வட்டி தள்ளுபடிக்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய  துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதேபோல, சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். நெல் கொள்முதல் மற்றும் கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகைக்காக 380 கோடி ரூபாய் நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இயந்திர வாடகை மையம் நிறுவ, 172 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை  அபிவிருத்தி இயக்கத்திற்காகவும் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

ராமேஸ்வரத்தில் கலாம் பெயரில் அரசு கல்லூரி
அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி ராமேஸ்வரத்தில் நிறுவப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த,  ஆயிரத்து 656 புள்ளி 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக அரசு தொடர்ந்து வழங்கும் என்றும், அதற்கு 313 புள்ளி 58 கோடி ரூபாய் பட்ஜெட்டி​ல் நிதிஒதுக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு , அதை செயல்படுத்த, இரண்டாயிரத்து 791 புள்ளி 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் பள்ளி கல்விக்கு ரூ.28,757.62 கோடி
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி கல்வித் துறைக்கு 28 ஆயிரத்து 757 புள்ளி 62 கோடி ரூபாயும்,  உயர் கல்வித் துறைக்கு நான்காயிரத்து 584 புள்ளி 21 கோடி ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அண்ணா பல்கலை கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளதாக  பன்னீர் செல்வம் அறிவித்தார்.

"வரும் நிதியாண்டில் 1,00,000 வீடுகள் கட்டித் தரப்படும்"
பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2019-2020 நிதியாண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கான்கிரீட் மேற்கூரை அமைக்க,  கூடுதல் நிதியாக 50 ஆயிரம் ரூபாய், அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும், சூரியமின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்ட, 420 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.20 லட்சம் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட உள்ளதாகவும், இதன் மூலம், ஆண்டுக்கு 74 கோடி ரூபாய்  அரசால் சேமிக்க முடியும் என பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய  துணைமுதலமைச்சர்  பன்னீர் செல்வம் தெரிவித்தார். திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ், 11 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 326 திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு, ஆயிரத்து 650 கோடி ரூபாய்  பட்ஜெட்டில் நிதிஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில், விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு ஆயிரத்து 546 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.வரும் நிதியாண்டுக்கு, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆறாயிரத்து 573 கோடி மற்றும் ஐந்தாயிரத்து 164 கோடி ரூபாய்  நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

"தரங்கம்பாடி உள்ளிட்ட 4 இடங்களில் மீன்பிடித் துறைமுகம்"
420 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்பட 4 இடங்களில் மீன்பிடி துறைமுகம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரபு திறன் மிக்க நாட்டு இன மற்றும் கலப்பின காளைகளை கொண்டு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், புதிய உறை விந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என பட்​ஜெட்டை தாக்கல் செய்து பேசிய  துணை முதலமைச்சர் தெரிவித்தார்.வரும் நிதியாண்டுக்கு, கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஆயிரத்து 252 கோடியும், பால்வளத் துறைக்கு 258 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்டத்துறை, வல்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்புச்சுவர், 116 கோடி ரூபாய் செலவில் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும், 80 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு தொலைத் தொடர்பு சாதனங்கள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு
தமிழ் மொழி வளர்ச்சி துறைக்கு, வரும் நிதியாண்டுக்கு, 54 புள்ளி 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உலக மொழிகளின் பட்டியலில் தமிழ்  மொழியை 14 -வது இடத்தில் இருந்து பத்தாவது இடத்துக்கு உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக  துணைமுதலமைச்சர்  பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஹார்வார்டு  பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, சர்வதேச பல்கலை கழகங்களிலும்  தமிழ் இருக்கை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.12,563 கோடி நிதி ஒதுக்கீடு
உலக வங்கி கடனுதவியுடன் 2 ஆயிரத்து 686 கோடியே செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு பட்ஜெட்டில், 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 மகப்பெறு நிதியுதவி திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதிஒதுக்கீடு
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பெறு நிதியுதவி திட்டத்திற்கு 959 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அம்மா குழந்தைகள் நலப்பரிசுப் பெட்டகம், மகப்பேறு சஞ்சீவி திட்டங்கள், மகளிர் சுகாதார திட்டம் போன்றவை தொடர்ந்து செயல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இயற்கை மரணம் மற்றும் விபத்தின் போது இழப்பீட்டு தொகை முறையே இரண்டு மற்றும் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், இந்த காப்பீட்டு திட்டத்திற்கு கட்டண தொகை செலுத்த 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1610 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5179 views

பிற செய்திகள்

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் : உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம்

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

31 views

தஞ்சாவூரில் 28-ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கருத்தரங்கம்

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி, வரும் 28-ஆம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.

10 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்க விழா : சேலத்தில் இன்று நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

46 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

35 views

"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

57 views

"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

635 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.