கம்பத்தின் இடைவெளியில் சிக்கிய சிறுமியின் தலை
பதிவு : பிப்ரவரி 08, 2019, 03:28 PM
கம்பத்தின் இடைவெளியில் சிக்கிய சிறுமி, ஒன்றரை மணிநேர போரட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்
திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கம்பத்தின் இடைவெளியில் சிக்கிய சிறுமி, ஒன்றரை மணிநேர போரட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சிறுகுமி கிராமத்தை சேர்ந்த வேலு, தனது மனைவி, மகளுடன் திருப்பதி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்தனா,  கம்பத்தின் இடைவெளியில் சிக்கிக் கொண்டார். குழந்தையை மீட்க பெற்றோரும், பொதுமக்களும் போராடியும் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், வெல்டிங் மிஷின் மூலம் மின்கம்பியை அகற்றி, சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.