ரூ15 ஆயிரத்திற்கு உப்பு பாக்கெட்டுகள் கொடுத்து மோசடி : போலி வங்கி அழைப்பை நம்பிய மளிகை கடைக்காரர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மளிகை கடை நடத்தி வரும் செந்தில் என்பவருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறைகள் வழங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது
ரூ15 ஆயிரத்திற்கு உப்பு பாக்கெட்டுகள் கொடுத்து மோசடி : போலி வங்கி அழைப்பை நம்பிய மளிகை கடைக்காரர்
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மளிகை கடை நடத்தி வரும் செந்தில் என்பவருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறைகள் வழங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. இதனை நம்பி தனது உதவியாளரிடம் 15 ஆயிரம் பணத்தை செந்தில் கொடுத்து அனுப்பியுள்ளார். வங்கி வெளியே காத்திருந்தவர் செந்திலின் உதவியாளரிடம் சில்லறை மூட்டையை கொடுத்துவிட்டு, 15 ஆயிரத்தை பெற்றுள்ளார். பின்னர், கடைக்கு வந்து அந்த மூட்டையை பிரித்த போது உள்ளே உப்பு பாக்கெட்டுகள் இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து செந்தில் போலீசில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபரை போலீசார் தேடி  வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்