தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு : நாகை பகுதி மக்கள் குற்றச்சாட்டு

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், சமூகநலத்துறை அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பயனாளிகளிடம் லஞ்சம் வசூல் செய்ததாக நாகை பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு : நாகை பகுதி மக்கள் குற்றச்சாட்டு
x
நாகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 3 ஆயிரம் பேருக்கு தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 1 சவரன் தங்கத்தை வழங்கினார். இந்த நிலையில் தங்கத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள், இதற்காக ஒவ்வொருவரிடமும் 2 ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஏழை மக்களுக்காக துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், நாகை மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்

Next Story

மேலும் செய்திகள்