"செல்போனில் பேசியபடி சாலையை கடக்காதீர்கள்" : ஆயுதப்படை காவலரின் நூதனப் பிரச்சாரம் - மக்கள் பாராட்டு

செல்போனில் பேசியபடி சாலையை கடப்பதை தவிர்க்க வலியுறுத்தி, சென்னையில் காவலர் ஒருவர் செய்து வரும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செல்போனில் பேசியபடி சாலையை கடக்காதீர்கள் : ஆயுதப்படை காவலரின் நூதனப் பிரச்சாரம் - மக்கள் பாராட்டு
x
செல்போனில் பேசியபடி சாலையை கடப்பதை தவிர்க்க வலியுறுத்தி, சென்னையில் காவலர் ஒருவர் செய்து வரும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பி-2 காவல்நிலையத்தில் தனசேகரன் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பாதை மற்றும் போக்குவரத்து சிக்னல் இருக்கும் இடங்களில், சாலையை கடக்கும் போது செல்போன் பேசவேண்டாம், கவனமாக செல்லுங்கள் போன்ற விழிப்பணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வந்தார். அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒட்டுநா்களும், தாமாக முன்வந்து தங்கள் ஆட்டோவிலும்  போஸ்டரை ஒட்டச் சொல்லி அவரை ஊக்கப்படுத்தினர். காவலர் தனசேகரனின் இந்த செயல் பொது மக்களிடையே அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்