பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்த முதலமைச்சர்

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவிற்கு மதுரை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 95 பக்க கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்த முதலமைச்சர்
x
* மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

* மேகதாது அணை குறித்து அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கிய மத்திய நீர் வள ஆணையத்தின் உத்தரவை திரும்ப பெற வேண்டுமென்றும் முதலமைச்சர் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்

* மேலும், முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட ஆய்வு செய்ய கேரளாவிற்கு வழங்கிய அனுமதியை திரும்ப  பெற வேண்டும் என்றும் ,அந்த அணையில்  152 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.,

* சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை  மத்திய மாநில அரசுகள் கூட்டு முயற்சியில்  செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

*  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு லட்சம் வீடுகளை கூடுதலாக கட்ட அனுமதிக்க வேண்டுமென்றும், முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

* சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்க 6751 கோடி ரூபாய் தேவை என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்