பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி

அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி
x
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மீதான நடவடிகைகள் குறித்து பதிலளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு, ஜெயங்கொண்டத்தில் மொத்தம் உள்ள நான்கு பள்ளிகளில், அங்கீகாரம் இன்றி செயல்படும் ஒரு பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கபட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் குறித்து கேட்டதற்கு, ஜெயங்கொண்டம் நிலவரம் குறித்து மட்டும் பதிலளிதததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பிப்ரவரி 21ம் தேதி நீதிமன்றதத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காத துறை செயலாளரை நீதிமன்றத்திற்கு வரவைத்து அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்