தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
x
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த போது, அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் வலைகள் மறறும் மீன்பிடி சாதனங்களை எடுத்துகொண்டு விரட்டியடித்தாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 

இந்நிலையில் மீனவர்கள்  நேற்று பிற்பகல் கச்சத்தீவு அருகே சென்ற போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.  இதையடுத்து மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து தாக்குதல் நடத்தியதுடன் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் gps செல்போன் போன்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு சென்றதாக மீனவர்கள் தெரிவித்ததுடன் ரீகன் என்ற மீனவரின் படகு மீது தாக்குதல் நடத்தியதுடன் படகில் இருந்த மீனவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதால் படகில் சென்ற 4 பேர் காயமடைந்ததாகவும் மேலும் அவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேலும் மீனவர்கள் தெரிவிக்கையில் இலங்கை கடற்படையின் உடைய செயலால் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க முடியும் கரை திரும்பியதாகவும் இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர் இனிவரும் காலங்களில் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்