அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு
பதிவு : ஜனவரி 19, 2019, 07:22 PM
பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தோல்வியடையும் பாடங்களை அடுத்த பருவத்துடன் சேர்த்து எழுத முடியாது என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புக்கு எதிரான வழக்கில், அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக அரசும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் பருவத்தில் தோல்வியடையும் பாடங்களை 3-வது பருவத்தில் மட்டுமே எழுதமுடியும், ஒரு பருவத்திற்கு 3 அரியர் பாடங்கள் மட்டுமே எழுதலாம் என்று கடந்த 2017-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.