கால்வாய்களை தூர்வார மேற்கொண்ட பணிகள் என்ன? - உயர் நீதிமன்றம்

சென்னையில், கால்வாய்கள் தூர் வார கண்காணிப்புக் குழு அமைக்க, சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்வாய்களை தூர்வார மேற்கொண்ட பணிகள்  என்ன? - உயர் நீதிமன்றம்
x
சென்னையில், கால்வாய்கள் தூர் வார கண்காணிப்புக் குழு அமைக்க, சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில், கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு   நீதிபதிகள் வினீத் கோத்தாரி,  அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்,  விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், 31 கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 60 மெட்ரிக் டன்  கழிவுகள் அகற்றப்பட்டதாக, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
இதனையடுத்து, சென்னையில் கால்வாய் தூர் வாரும் பணிகளை கண்காணிக்க குழு அமைத்து, பணி விவரங்களை 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்