தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த காளை - காளையை அமைதிப்படுத்திய பெண்

மணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பெண் உரிமையாளர் கிணற்றில் இறங்கி அமைதிப்படுத்தியதை தொடர்ந்து ​மீட்கப்பட்டது
தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த காளை - காளையை அமைதிப்படுத்திய பெண்
x
மணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பெண் உரிமையாளர் கிணற்றில் இறங்கி அமைதிப்படுத்தியதை தொடர்ந்து ​மீட்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், பெத்தமேட்டுப்பட்டியில்  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பெரிய குளத்துப்பட்டியைச் சேர்ந்த செபஸ்தியம்மாள் என்பவரின் காளை அருகில் உள்ள 30 அடி ஆழ தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் காளையை மீட்க முயன்றனர். ஆனால் காளை ஆக்ரோஷமாக இருந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. பின்னர் செபஸ்தியம்மாளின் கணவர் கயிற்றில் அந்தரங்கத்தில் தொங்கியபடி காளையின் மீது கயிறு வீசி பிடித்தார். பின்னர் காளை உரிமையாளர் செபஸ்தியம்மாள் கிணற்றில் இறங்கி காளையை  தடவி கொடுத்து அமைதிப்படுத்தினார்.  இதனையடுத்து காளையை கயிறு கட்டி கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மேலே கொண்டு வந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்