மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தில் நாளை ஆய்வு : விரைவில் புதிய சுரங்க பாதையில் சேவை

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். -வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூர சுரங்க வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.
மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தில் நாளை ஆய்வு : விரைவில் புதிய சுரங்க பாதையில் சேவை
x
சென்னையில் சென்ட்ரிலில் துவங்கி பரங்கிமலை வரையிலும், அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ்சில் துவங்கி வண்ணாரபேட்டை வரையிலும் 35 கிலோ மீட்டர், தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள்நிறைவடைந்துள்ளன. இந்த புதிய வழித்தடத்தில் சேவையை துவக்க, நாளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், ஆய்வு மேற்கொள்கிறார். தண்டவாளம் கட்டமைப்பின் நிலை மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஆய்வை தொடர்ந்து, அவர் அளிக்கும், அனுமதியை அடுத்து, புதிய வழித்தடத்தில் சேவை துவக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்