அழிந்து வரும் கிராமிய கலையான வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு கலை தற்போது அழிந்து வரும் நிலையில் இருப்பதாக அதனை சார்ந்த கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
x
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், சுவாமிகளின் தெய்வீக கதைகள் என எதுவாக இருந்தாலும் மக்களுக்கு புரியும் வகையில் எளிதாக சொல்வது பாரம்பரிய கலைகள் தான்.. அதில் பிரதான இடம் பிடித்திருப்பது வில்லுப்பாட்டு கலை..கதைகளை ராகமாக பாடி எளிய முறையில் புரிய வைக்கும் கலை இது.. இடையிடையே அதற்கேற்றார் போல ஒலிகளையும் சேர்த்து பார்ப்போரை கட்டிப் போட வைக்கும் தன்மை கொண்ட இந்த கலையை கிராம திருவிழாக்களின் போது நடத்துவார்கள்.அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கலையாக இது இருந்து வருகிறது. ஆனால் மாறி வரும் நவீனத்திற்கு ஏற்றார் போல மக்கள் மாறிக் கொண்டிருப்பதால் இந்த கலையானது அழிவை எதிர்நோக்கி இருப்பதாக கூறுகிறார் வில்லுப்பாட்டு கலைஞர் மாரியம்மாள்.மாரியம்மாள், வில்லுப்பாட்டு கலைஞர் தற்போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே இந்த வில்லுப்பாட்டு கலை நடத்தப்படுகிறது. கோவில் திருவிழாக்களின் போது  இந்த கலை நடத்தப்படுவதால் இதனை சார்ந்த கலைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..மேலும் கலைஞர்களுக்கு அரசு உரிய உதவிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.அடுத்த தலைமுறைக்கும் இந்த கலையை கொண்டு செல்ல அரசு உரிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் இவர்கள் ​விடுக்கும் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்