தமிழர்களின் வீர விளையாட்டுக்காக விலங்குகளை வளர்க்கும் இளைஞர்

தமிழர்களின் வீர விளையாட்டுக்கு பயன்படுத்தும் காளை சேவல் உள்ளிட்ட விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் வேடசந்தூர் இளைஞர் ஒருவர்..
தமிழர்களின் வீர விளையாட்டுக்காக விலங்குகளை வளர்க்கும் இளைஞர்
x
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி மனோஜ். விவசாயம் கைவிட்டாலும் விவசாயிகளுக்கு தோழனாகவும், தமிழர்களின் வீர விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் நாட்டின காளை, குதிரை, சேவல், நாய் உள்ளிட்ட விலங்குகளை வளர்ப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். போட்டிகளுக்காக விலங்குகளுக்கு சத்தான உணவுகளை கொடுத்தும், முறையாக பயிற்சி அளித்தும் வருகிறார், மனோஜ். தமிழகத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளும், பதக்கங்களும் பெற்று விவசாயிகள் மத்தியில் விலங்குகள் வளர்ப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார் மனோஜ். காளை, குதிரை, சேவல் உள்ளிட்ட விலங்குகளை வளர்ப்பதற்கு அரசு போதிய கடன் உதவி செய்வதுடன், ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது போல சேவல் சண்டைக்கான தடையையும் நீக்க வேண்டும் என்பதே மனோஜின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்