கடை உரிமையாளரை திசை திருப்பி செல்போன்கள் கொள்ளை - சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு
பதிவு : ஜனவரி 13, 2019, 01:52 AM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பெயிண்ட் கடை உரிமையாளரை திசை திருப்பி, இரண்டு செல்போன்கள் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பகவதி என்ற பெண்ணிற்கு  சொந்தமான பெயிண்ட் கடைக்குள் வந்த இரண்டு இளைஞர்கள், பல்வேறு வகை பெயிண்ட் குறித்து விசாரிப்பது போல நடித்துள்ளனர். பகவதியும் அவர்களுக்கு மாதிரியை காட்டுவதற்காக எழுந்து உள்ளே சென்றுள்ளார். இந்த நேரத்தை  பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள், அங்கிருந்த இரண்டு செல்போன்களையும் திருடிச் சென்றனர். பின்னர் தனது செல்போன்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகவதி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, செல்போன்களை இளைஞர்கள் திருடிச் சென்றது உறுதியானது. இதையடுத்து, பகவதி மற்றும் அவரது கணவர் இருவரும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்று கொண்டிருந்த போது, வழியில் கொள்ளையர்களில் ஒருவனைப் பார்த்துள்ளனர். இவர்களைப் பார்த்து ஓட்டம் பிடித்த கொள்ளையனை, அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

42 views

ரயில் மின்பாதை வயர் அறுந்து விழுந்தது...

கோவில்பட்டி அருகே ரயில் பாதையில் மின் வயர் அறுந்து விழுந்ததால், சென்னைக்கு வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக வரும் என்று கூறப்படுகிறது.

29 views

மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மூதாட்டியை கடத்தி நகை பறிப்பு

கோவில்பட்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, மூதாட்டியை கடத்தி நகை பறித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

64 views

பிற செய்திகள்

இளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

22 views

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

49 views

கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி

முறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.

7 views

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

34 views

பட்டத்து காளைக்கு படையலிட்டு வழிபாடு

தேனி மாவட்டம் கம்பத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பட்டத்து காளைக்கு மக்கள் படையலிட்டு வழிபட்டனர்.

7 views

பொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

440 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.