தமிழக வனப்பகுதிகளில் வெளிநாட்டு மரங்கள்

சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும் சவாலையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில் வெளிநாட்டு மரங்கள்
x
தமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்கள் மற்றும் வாட்டில், உன்னிசெடி போன்ற தாவரங்களை  அப்புறப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, அந்த மரங்களை அகற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில், இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன், புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை பேராசிரியை பிரியா தேவிதார் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2 மாதங்களுக்குள் அரசுக்கு இந்த குழு பரிந்துரை வழங்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் தமிழக அரசு தகுந்த  உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்