ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் டாப் 10 காளைகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் பிரசித்தி பெற்ற ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகள் பற்றிய சிறப்பு தொகுப்பு...
x
சிவகங்கை மாவட்டம் ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கத்தின் சார்பில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் தென்னந்தோப்பில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் Top 10 காளைகளுக்கும், அதில் பங்கேற்கும் காளையர்களுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.காளையர்களை தன் கொம்புகளாலும் உடல் கம்பீரத்தாலும் பார்த்ததும் பின் வாங்க செய்யும் புலிக்குளம் காளைகள் சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை பெற்றவை.தமிழக ஜல்லிக்கட்டு வரலாற்றில் காங்கேயம் காளை, கண்ணபுரம், புலிக்குளம், நாட்டுகுட்டை, உம்பளச்சேரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காளை இனங்கள் உள்ளன.பெருத்த திமில், கூறிய கொம்புகள், ராஜநடை என கம்பீரமாக வலம் வரும் காளைகள் களத்தில் நிற்கும் போதே வீரர்களை மிரள வைக்கும். ஜல்லிக்கட்டுக்காக தயாராகும் காளைகள், களத்தில் மல்லுக்கட்டத் தயாராகும் காளையர்கள் என தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்க தமிழகமே தயாராகிக் கொண்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்