கோபி செட்டிபாளையம் 2 புதிய நுழைவு வாயிலுக்கு காமராஜர் பெயர் சூட்டுங்கள் - காமராஜர் ஆதித்தனார் கழகம் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் 2 புதிய நுழைவு வாயில்களுக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காமராஜர் - ஆதித்தனார் கழகத்தின் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
கோபி செட்டிபாளையம் 2 புதிய நுழைவு வாயிலுக்கு காமராஜர் பெயர் சூட்டுங்கள் - காமராஜர் ஆதித்தனார் கழகம் வலியுறுத்தல்
x
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் 2 புதிய நுழைவு வாயில்களுக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காமராஜர் - ஆதித்தனார் கழகத்தின் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் மாநில  நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். 1958 ம் ஆண்டு கோபியில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற அகில இந்திய சீர்திருத்த மாநாட்டை நினைவு கூறும் வகையில் கரட்டூர் மற்றும் சாந்தி தியேட்டர் என இரு இடங்களில் நுழைவு வாயில் கட்டப்பட்டு வருவதை சிலம்பு சுரேஷ், தமது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, புதிய நுழைவு வாயிலுக்கு காமராஜர் பெயர் சூட்டுவதுடன் பழைய கல்வெட்டையும் பதிக்க வேண்டும் என்றும் சிலம்பு சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்