பெட்ரோல் நிலையத்தில் மாணவர் கொலையான வழக்கு : 9 பேர் கைது

சென்னையை அருகே கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் நிலையத்தில் மாணவர் கொலையான வழக்கு : 9 பேர் கைது
x
ஆவடி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேரமாக பணியாற்றும் கல்லூரி மாணவர் ஒருவர், 2 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாப்பேட்டையில் பதுங்கியிருந்த சதீஷ், சாம், அப்புன், கார்த்திக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரித்தபோது, பாலா என்ற ரவுடியை கொல்வதற்காக சதீஷ் உள்ளிட்டோர் சென்றதும், வீட்டில் பாலா இல்லாமல் ஏமாற்றத்துடன் வந்தபோது, ஆத்திரத்தில் மாணவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், ஆயுதங்களுடன் சுற்றிய பாலா மற்றும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, போலீசாரிடம் ரவுடிகள் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்