1,884 புதிய மருத்துவர்களுக்கு விரைவில் பணி நியமனம் - அமைச்சர் விஜய்பாஸ்கர்

ஒரு வார காலத்திற்குள் ஆயிரத்து 884 புதிய மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 ஆயிரத்து 345 புதிய செவிலியர்கள் பணியிடம் விரைவில் தேர்வு வைத்து நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் தமிழகத்தில் புதிதாக 100 ஆம்புலன்சுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்