தமிழகத்தில் 300 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை வரும் கல்வியாண்டுக்குள் நிரப்பவில்லை என்றால், அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஆசிரியர் பல்கலைக் கழகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 300 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை
x
தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் 14 அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 697 தனியார் கல்வியியல் கல்லுாரிகள்  இயங்கி வருகின்றன. தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் கல்லுாரிக்கு வராவிட்டாலும் அவர்களை தேர்வு எழுத அனுமதிப்பது, தகுதியான ஆசிரியர்களை, முதல்வரை நியமிக்காமல் கல்லுாரியை நடத்துவது  போன்ற முறைகேடுகளில் சில கல்லுாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில்,எந்தெந்த கல்லுாரிகளில் முதல்வர்கள் இல்லை என்ற விவரத்தை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 300 தனியார் கல்வியியல் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாதது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. வரும் கல்வி ஆண்டு  தொடக்கத்திற்குள் முதல்வர் பணியிடங்களை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் நிரப்பாவிட்டால், அந்த கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்