திரையரங்க வளாகத்திலேயே திருமணம் செய்துகொண்ட ரஜினி ரசிகர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ஸ் திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.
x
ரஜினிகாந்த நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படத்தின் முதல் காட்சியை காண திரையரங்குகள் முன்பு காத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் சென்று திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ஸ் திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர். அன்பு, காமாட்சி என்ற அந்த ஜோடிகளுக்கு, திரையரங்க வளாகத்திலே வேத மந்திரங்கள் மேள தாளங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து புதுமண ஜோடிகள் கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் மகிழ்ச்சியை கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்