தோற்றத்தில் தனித்து தெரியும் புதுச்சேரி யானை லட்சுமி

தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, தனித்துவமான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
தோற்றத்தில் தனித்து தெரியும் புதுச்சேரி யானை லட்சுமி
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில், அறநிலையத்துறை சார்பில் யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்த முகாமில், 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இதில் மற்ற கோயில் யானைகளை விட புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி தனித்து தெரிகிறது. பொதுவாக ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தம் இருக்கும் என்ற நிலையில், லட்சுமிக்கு நீண்ட தந்தம் இருப்பது சிறப்பான ஒன்றாக கூறப்படுகிறது. 21 வயதான இந்த யானையை,  சக்திவேல், செந்தில்குமார் ஆகிய பாகன்கள் பராமரித்து வருகின்றனர். தனது சுட்டித்தனத்தாலும், அழகிய தோற்றத்தாலும் பார்ப்போரை லட்சுமி வெகுவதாக கவர்ந்து வருகிறது. அதேநேரம் குழந்தைகள் என்றால் லட்சுமிக்கு கொள்ளை பிரியம் என கூறும் பாகன்கள், லட்சுமி யானை மிகவும் அமைதியான குணம் கொண்டது எனவும் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்