புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேன்,லாரி நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி
பதிவு : ஜனவரி 06, 2019, 05:08 PM
மாற்றம் : ஜனவரி 06, 2019, 05:13 PM
புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர், வேனில் சபரிமலை சென்றுவிட்டு, புதுக்கோட்டை வழியாக திரும்பி கொண்டிருந்தனர். திருமயம் அருகே எதிரே வந்த லாரி, எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 8 பேர் திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். எஞ்சிய  ஐந்து பேர், புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த விபத்து குறித்து, மாவட்ட ஆட்சியர் கணேஷ், எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.