ஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா : தமிழர் பெருமைகளை எடுத்துரைத்த ஆளுநர்
பதிவு : ஜனவரி 05, 2019, 02:01 PM
இனிமையான தமிழ் மொழியை தாம் அதிகம் விரும்புவதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், ஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வேல்ஸ் குழும தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் வி.ஐ.டி. குழும தலைவர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 'அனைவருக்கும் காலை வணக்கம்' என்று தமிழில் கூறி ஆளுநர் பேச்சை தொடங்கினார். வெளிநாட்டில் இருந்து வந்துள்ள தமிழர்களை பார்த்து ''எப்படி இருக்கிறீர்கள்?' என்று தமிழில் கேட்டார். 'தமிழ் இனிமையான மொழி என்றும், அதனால் தான் தமிழ் மொழியை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.