யானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
x
நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமத்தில் யானைகள் வழித்தடம் என அடையாளம் காணப்பட்ட பகுதியில் உள்ள தனக்கு  சொந்தமான சுமார் 23  ஏக்கர் நிலத்தை அறிவிப்பாணையில் இருந்து நீக்கக்கோரி அதன் உரிமையாளர் புஷ்பாபால் மங்கல்சந்த் வைத் என்பவர் கடந்த 2014ஆண்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினார்.அதனை பரிசீலித்த அப்போதைய மாவட்ட ஆட்சியர், யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையில் இருந்து மனுதாரரின் சம்பந்தப்பட்ட நிலங்களை நீக்கும்படி, அரசுக்கு பரிந்துரைத்தார்.  இதனை  ஏற்க அரசுமறுத்து விட்டது.இதை எதிர்த்து புஷ்பாபால் மங்கல்சந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அறிவிப்பாணையில் வரும் நிலத்தை நீக்கும்படி ஏன் பரிந்துரைத்தார்  என கேள்வி எழுப்பியது. இது உள்நோக்கம் கொண்டது என்றும் கண்டனம் தெரிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில், யானைகள் வழித்தடம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்