காட்டு யானை 'விநாயகன்' பிடிபட்டது

கோவை அருகே 8 பேரை கொன்று மக்களை அச்சுறுத்திவந்த 'விநாயகன்' யானை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டது.
காட்டு யானை விநாயகன் பிடிபட்டது
x
கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் பகுதிகளில் நண்பர்களாக 2 யானைகள் சுற்றித் திரிந்தன. அவை, விளை நிலங்கள் மற்றும் தோட்டப் பயிர்களை அழித்த நிலையில், 8 பேரை மிதித்து கொன்றுள்ளது. இதைத் தொடர்ந்து, விநாயகன், சின்னத்தம்பி என அவற்றுக்கு பெயரிட்ட வனத்துறை, அவற்றை பிடிப்பதற்காக ஆப்ரேஷன் 'விநாயக்'கை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கும்கி உதவியுடன் 'விநாயகன்' சுற்றிவளைக்கப்பட்டது. 

மூர்க்கத்தனமாக திமிறிய விநாயகனுக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தி வனத்துறையினர் யானையை லாரியில் ஏற்றி முதுமலை காட்டுக்கு கொண்டு சென்றனர். அதேநேரம் போக்குக்காட்டி வரும் மற்றொரு யானை சின்னத்தம்பியை பிடிக்கும் பணி கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்