அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள்

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள்
x
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த வகுப்புகளுக்காக வரும் கல்வியாண்டில் 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி படிப்பதற்கு 53 ஆயிரத்து 993 மாணவர்கள் பதிவு செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 171 மையங்களில், 4 ஆயிரத்து 803 மாணவர்களும், குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 20 மையங்களில் 422 மாணவர்களும் பதிவு செய்திருப்பதாக அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவது, கற்றல் திறன் மேம்பாடு மாணவர்களின் ஆங்கில எழுத்து மற்றும் பேசும் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு திட்டத்தின் கீழ் இந்த  வகுப்புகள் தொடங்கப்படுவதாக விளக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்