தமிழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை : நிதி ஒதுக்கீடு - கே.ஜே.அல்போன்

தமிழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
தமிழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை : நிதி ஒதுக்கீடு - கே.ஜே.அல்போன்
x
மாநிலங்களவையில் அதிமுக எம்.பி மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய அரசின் ஸ்வதேஷி தர்ஷன் திட்டத்தின் கீழ், 2016-17 ஆம் ஆண்டில்  சென்னை, மாமல்லபுரம், ராமேஸ்வரம், மனப்பாடு, கன்னியாகுமரி ஆகிய கடலோர பகுதி மேம்பாட்டுக்காக 99 புள்ளி 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அவற்றில் 45 புள்ளி 24 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

புனித தலம் ஆன்மிக மரபு சார்ந்த பகுதிகள் மேம்பாட்டுத் திட்டம்  மூலம் 2016-17 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 16 புள்ளி 48 கோடி ரூபாய் அங்கீகரிக்கப்பட்டு, புள்ளி 24 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  மேம்பாட்டுக்காக, 5 புள்ளி 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 2 புள்ளி 59 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்