பெய்ட்டி புயலின் எதிரொலி - சென்னையில் கடல் சீற்றம்

பெயிட்டி புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் பழவேற்காட்டில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 156 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
x
வங்க கடலில் உருவாகியுள்ள பெயிட்டி புயல் ஆந்திராவில் மதியம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள'து. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழுவேற்காடு பகுதியில் கடுமையான காற்று வீசி வருகிறது. கடல் கடும் சீற்றமாக உள்ளதால் கடலோர பகுதிகளான கோரைக்குப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் குடியிருப்புகளில்  கடல் நீர் உட்புகும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இதனிடையே பழவேற்காடு பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ளவர்களை, கோட்டாட்சியர் நந்த குமார் மற்றும் வட்டாட்சியர் புகழேந்தி ஆகியோர் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து கோரைக்குப்பத்தை சேர்ந்த 69 குழந்தைகள் உட்பட 156 மீனவர்களை 2 அரசு பேருந்துகளில் ஏற்றி, ஆண்டார்மடம் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்