தமிழில் தந்தி அனுப்பும் முறை கண்டுபிடித்த 'தமிழ் தந்தி' சிவலிங்கம் உயிரிழப்பு

தமிழில் தந்தி அனுப்பும் முறையை அறிமுகப்படுத்திய 'தமிழ் தந்தி' என்று அழைக்கப்படும் சிவலிங்கம், வயது மூப்பின் காரணமாக திருச்சியில் காலமானார்.
தமிழில் தந்தி அனுப்பும் முறை கண்டுபிடித்த தமிழ் தந்தி சிவலிங்கம் உயிரிழப்பு
x
924 ஆம் ஆண்டு பிறந்த சிவலிங்கம் தபால் துறையில் பணியாற்றி வந்தார். தொலைவரி முறை எனப்படும் தந்தி முறை நீண்ட காலமாக ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. அதில் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர் சிவலிங்கம்.1955 ஆம் ஆண்டு இந்த முறையை அவர் கண்டுபிடித்து, 1956இல் இதை நடைமுறைப்படுத்தி இயக்கி காட்டினார். இவர் அறிமுகப்படுத்திய முறையை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து  தமிழில் தந்தி அனுப்பும் முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.  திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த 'தமிழ் தந்தி' சிவலிங்கம் கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்று இருந்துள்ளார். இந்நிலையில் 94 வயதான சிவலிங்கம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்