வரும் 20ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் பதிவு செய்ய திட்டம்
பதிவு : டிசம்பர் 15, 2018, 03:10 AM
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் வரும் 20ஆம் தேதி மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தொலைக்காட்சிக்காக வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு, அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்தது. 

சசிகலாவுக்கு எதிரான நான்கு  வழக்குகள், எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் காணொலி காட்சி மூலம் ஆஜராக சசிகலா மனு அளித்தார். 

இந்த நிலையில் சசிகலா மீதான வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில், நீதிபதி மலர்மதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.