செவிலியராக ஆசைப்பட்ட மாணவி - 'ஒளி' ஏற்றிய ஆட்சியர்

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி இருளர் இனத்தை சேர்ந்த மாணவிக்கு செவிலியர் படிப்பு பயில்வதற்கான ஆணையை வழங்கியதுடன் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
x
திருவண்ணாமலை மணலூர்பேட்டை, இருளர் இனத்தை சேர்ந்தவர் வரலட்சுமி கணவர் இறந்த நிலையில், குப்பை அள்ளும் தொழில் செய்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். அவரது மகள் சத்தியா, செவிலியர் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் உதவியை நாடியுள்ளார். அவரிடம் சத்தியா தனது குடும்ப நிலையை விளக்கியதை தொடர்ந்து,  அரசு ஒதுக்கீட்டின்மூலம் மாணவிக்கு இடம் ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளார்.  தொடர்ந்து மாணவியின் படிப்பு செலவிற்காக 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாகவும் வழங்கியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவி மற்றும் அவளது பெற்றோர்கள் ஆட்சியருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து மாணவி ஆனந்த கண்ணீரில் பேச முடியாமல் தவித்த‌து காண்போரையும் கலங்க செய்த‌து. சமீபகாலமாக திருவண்ணாமலை ஆட்சியர் செய்துவரும் இதுபோன்ற மனிதநேயம் மிகுந்த  நடவடிக்கைகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்