பழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : "விசாரணை அடுத்த வாரம் துவக்கம்" - பொன்.மாணிக்கவேல்

பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : விசாரணை அடுத்த வாரம் துவக்கம் - பொன்.மாணிக்கவேல்
x
பழனி முருகன் கோயிலுக்கு செய்யப்பட்ட உற்சவர் சிலையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த முறைகேட்டில் தொடர்புடைய ஸ்தபதி முத்தையா மற்றும் இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேல், பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐம்பொன் முருகன் சிலை முறைகேடு வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் துவங்கவுள்ளதாக தெரிவித்தார். பழனியில் தங்கியிருந்து தன்னுடைய நேரடி மேற்பார்வையில் மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்