சென்னை : பிளாஸ்டிக் தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பதிவு : டிசம்பர் 13, 2018, 03:58 PM
சென்னை சேப்பாக்கத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை நீக்க கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை நீக்க கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர். வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த தடையால் 25 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், தடை குறித்து அரசு மறுபரிசீலனை செய்து, இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விக்ரமராஜா, அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.