திமுகவில் இணைகிறார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி?

தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் திமுக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் இணைகிறார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி?
x
தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருப்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர், அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகி இருந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் அவரும் ஒருவர். சமீப காலமாக, தினகரன் மீதான அதிருப்தி காரணமாக,  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அந்த கட்சியில் செந்தில் பாலாஜி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, பேருந்துகள் மற்றும்  கார்களில் அவரது ஆதரவாளர்கள், சென்னைக்கு வரவுள்ளனர். இன்று  பிற்பகலில், கோவையில் இருந்து விமானம் மூலம் செந்தில் பாலாஜி சென்னை வருவதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் செந்தில்பாலாஜி, கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இருந்து 96ம் வருடம் அ.தி.மு.க.வுக்குப் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்தாரா, செந்தில் பாலாஜி?


இதற்கிடையே, சென்னையில் கடந்த வாரம், ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சிறப்பாக அமைந்ததாகவும், செந்தில்பாலாஜி விரும்பியபடியே, திமுகவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தி.மு.க.வில் இணைந்தபிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க.வில் இணைய வாய்ப்பிருப்பதாக செந்தில்பாலாஜியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 




Next Story

மேலும் செய்திகள்