நாளை யானைகள் புத்துணர்வு முகாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை தொடங்குகிறது.
நாளை யானைகள் புத்துணர்வு முகாம்
x
தமிழக அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில் செயல்படும்  கோவில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில்,  கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டு தோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் யானைகள் முகாமிற்கு புறப்பட்டு செல்கின்றன.
நாளை தொடங்கும் புத்துணர்வு முகாம் அடுத்த மாதம் 30-ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.  இதனால் முகாமிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை , சரிவிகித உணவு, எடை பராமரிப்பு , உடற்பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளது.
முகாமிற்கு புறப்பட்டு சென்ற யானைகள்

தேக்கம்பட்டியில் நடைபெறும் புத்துணர்வு முகாமிற்கு,  நெல்லை நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி , சங்கரன்கோவில் கோமதியம்மன் கோயில் யானை கோமதி ,தென்காசி இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி , திருக்குறுங்குடி கோயிலில் உள்ள இரண்டு யானைகள் உள்பட 5 யானைகள் லாரி மூலம் தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.
முகாமிற்கு புறப்பட்டு சென்ற ராமநாதசுவாமி கோயில் யானை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி,  யானைகள் புத்துணர்வு முகாமிற்கு தனி வாகனத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. முன்பாக யானை ராமலட்சுமிக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது.
 முகாமிற்கு சென்ற ஒப்பிலியப்பன் கோயில் யானை 

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா,   லாரி மூலம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது.   முன்னதாக யானை பூமாவிற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டன.




Next Story

மேலும் செய்திகள்