நெருங்கி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்வு : காளைகளை தயார் செய்யும் பணியில் வீரர்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் நிலையில் காளைகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
x
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நெருங்கி வருகிறது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் வரும் ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக காளைகளை தயார் செய்யும் பணியில் காளைகளை வளர்ப்போர் தீவிரம் காட்டிவருகின்றனர். தச்சன்குறிச்சியை தொடர்ந்து மாவட்டத்தை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து போட்டிகள் நடத்தப்படும் என்பதால் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல் பயிற்சிகள், அதன் கொம்புகளுக்கு தேவையான பயிற்சிகள் என விதவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் விதமாக மாடுகளுக்கு சத்தான உணவுகளையும் மாடுகளை வளர்ப்போர் வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பல போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளும் சரி, புதிதாக ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்கொள்ளும் காளைகளுக்கும் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கட்ட பயிற்சிகளை காளைகளுக்கு வழங்கி வருவதாகவும் மாடுகளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு அனைத்து தரப்பும் இப்போது கொண்டாட்டங்களை தொடங்கி இருப்பது இளைஞர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்