சீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்

தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.
சீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்
x
தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.

இதுவரை இலங்கை சென்று அங்கிருந்து, மட்டுமே மற்ற நாடுகளுக்கு சென்று வந்த கப்பல்கள் இனி நேரடியாக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதே போல சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து, முதல் முறையாக 4 ஆயிரத்து 300 பெட்டகங்களை உள்ளடக்க கூடிய வகையில், மதர் வெசல் என அழைக்கப்படும் பிரம்மாண்ட கப்பல் கையாளப்பட உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை கொடியசைத்து திறந்து வைக்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் வரும் காலங்களில், அயல்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதியில் செலவுகளும், நேரமும் மிச்சமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்