எண்ணெய் கப்பலுக்கு ரூ.2.75 கோடி அபராதம்
பதிவு : டிசம்பர் 10, 2018, 01:05 PM
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரத்தில் எண்ணெய் கப்பலுக்கு 2 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த மாதம் 'கோரல் ஸ்டார்' என்ற கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது. கடலுக்குள் கலந்த சுமார் 2 டன் கச்சா எண்ணெய் ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், எண்ணெய் கசிவுக்கு காரணமாக 'கோரல் ஸ்டார்' கப்பலுக்கு, கடலோர காவல் படை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.  மேலும், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் வெளியேற விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.