7 பேர் விடுதலை விவகாரம் : மத்திய அரசு பதில் மனு
பதிவு : டிசம்பர் 10, 2018, 12:54 PM
ராஜீவ் காந்தி கொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து கடந்த ஏப்ரல் மாதமே மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பதில் அறிக்கை அனுப்பி விட்டதாக  மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, 7 பேர் விடுதலை தொடர்பான எந்த மனுவும் தங்கள் முன் நிலுவையில் இல்லை என்பதால், மனுதாரர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.