அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை

அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை
x
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், செவிலியர்  பணியில் முதல் பத்தாண்டுகள் வரை உள்ளவர்கள், வெள்ளை நிற பேன்ட் சட்டையும், அதன் பிறகு வெள்ளை நிற சுடிதார், கோட்டும் அணிந்து பணியாற்றுவார்கள் என்றும் 2ஆம் நிலை கண்காணிப்பு செவிலியர்கள் இளம் சிவப்பு நிற புடவை மற்றும் கோட் அணிந்தும், முதல் நிலை கண்காணிப்பு செவிலியர்கள் பச்சை நிற புடவை மற்றும் கோட் அணிந்தும் பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆண் செவிலியர்கள் சீருடையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய சீருடை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்