பெண்கள் பாதுகாப்புக்காக "181" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : டிசம்பர் 10, 2018, 11:29 AM
மாற்றம் : டிசம்பர் 10, 2018, 11:36 AM
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசு, பெண்களை பாதுகாக்க 181 சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தசேவை, டெல்லி, குஜராத்தை தொடர்ந்து தமிழகத்திலும் இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தொலைபேசி சேவை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைக்கு உளவியல் ரீதியான உதவிக்கு  181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை  தொடர்பு கொண்டால் அதற்குரிய ஆலோசனை வழங்கப்படும். சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பகுதியில் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகிறதோ அந்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக உதவிகள் பெறப்படும் வகையில் இந்த சேவையானது துவங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2295 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

தேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

0 views

பாஜக கூட்டணி தமிழகத்தில் 30-35 இடங்களை பிடிக்கும் - ஹெச்.ராஜா நம்பிக்கை

இந்தியாவில் 360 இடங்களையும் பாஜக கூட்டணி பிடிக்கும் என்று பாஜக தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

3 views

விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய நிர்வாகிகள் கூட்டம் - திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்,சென்னையில் நடைபெற்றது

11 views

மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

மதுரை மேலூர் சுங்கச்சாவடியில், நடந்த வாகன தணிக்கையின் போது 3 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

10 views

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் கையெழுத்துக்கு எதிரான வழக்கு

விசாரணை 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

10 views

தேர்தல் 2019 : துணை ராணுவப் படை - போலீசார் அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தலை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில துணை ராணுவப் படையினர் மற்றும் ராயபுரம், காசிமேடு போலீசார் தேர்தல் பாதுகாப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.