சாலையோரங்களில் கட்சி கொடி கம்பங்கள் - உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நீதிமன்றம் கண்டனம்

சாலையோரங்களில் அனுமதி இல்லாமல் கொடி கம்பங்கள் நடப்பட்டு வருவதை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதா என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாலையோரங்களில் கட்சி கொடி கம்பங்கள் - உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நீதிமன்றம் கண்டனம்
x
பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் வைக்க தடை விதிக்க கோரி, தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் ராஜ மாணிக்கம் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொடிகம்பங்களை அகற்றாமல் உள்ளாட்சி அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவித்தனர். எனவே, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி, கொடி கம்பங்கள் வைக்கப்படவில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்