கல்லூரிகளில் ராகிங் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

கல்லூரிகளில் மாணவர்களிடையே நடக்கும் ராகிங் செயலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரிகளில் ராகிங் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
x
மாநில அளவில் ராகிங் தடுப்பு குழுவின் தலைவராக ஆளுநர் உள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உள்துறை செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. நடப்பு கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் எத்தனை ராகிங் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார். தொடர்ந்து வரும் கல்வியாண்டில் கல்லூரிகளில் ராகிங் செயல்பாடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என கூறிய ஆளுநர், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்