அரசு பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அந்தந்த பள்ளிகளே, நிரப்பிக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை உத்தரவு
x
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அந்தந்த பள்ளிகளே, நிரப்பிக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு மாதமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 3 மாதங்களுக்கு மட்டும் 7 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக கணினி பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்காக ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்