ரூ.4000 கோடி பண பரிவர்த்தனை விவகாரம் - சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க சிறைத்துறை அனுமதி

சிறையில் உள்ள சசிகலாவிடம் வருகிற 13, 14ஆம் தேதிகளில் வருமான வரித்துறையினர் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.4000  கோடி பண பரிவர்த்தனை விவகாரம் - சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க சிறைத்துறை அனுமதி
x
கடந்த ஆண்டு நவம்பரில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், நூற்றுக்கும் மேற்பட்ட போலி கம்பெனிகளை உருவாக்கி, அதன் வாயிலாக, சுமார் 4000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து, சசிகலாவிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் முயற்சி செய்தபோது, சிறையில் மவுன விரதம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த உள்ளனர். அதற்கான அனுமதியை சிறைத்துறை நிர்வாகத்திடம் வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்